அரூரில் பொது இடங்களில் மது குடிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.எஸ்.மூவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூல அலுவலகம், குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்ற வளாகங்கள், அரசுஅலுவலர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பொது இடங்களில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதனால், அரசு அலுவல வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் மற்றும் சட்ட விரோத செயல்கள் நாள்தோறும் நடைபெறுகிறது. பொது இடங்களில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை பொது இடங்களில் வீசி செல்கின்றனர். எனவே, அரூர் நகர் பகுதியில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக