உழவன் செயலியில் விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்து, பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

உழவன் செயலியில் விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்து, பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


உழவன் செயலியில் விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்து, பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகளை உள்ளடக்கி உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வேளாண் கூலித்தொழிலாளர்கள் தங்களின் மாவட்டத்தை விட்டு பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதனை தவிர்த்து உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும். 


ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், விவசாயிகள் விவசாய பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ளவும் உழவன் செயலி விவசாய தொழிலாளர்கள் குறித்த சேவை சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயம் ஓரளவு இயந்திரமயமாகி விட்டபோதிலும் விதைப்பு, களை எடுத்தல், நீர் பாசனம், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு, அறுவடை செய்தல் மற்றும் அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகள் போன்ற விவசாய பணிகளுக்கு பருவகாலங்களில் வேளாண் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. 


எனவே, உழவன் செயலியின் மூலம் வேளாண் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையை விவசாயிகள் சமாளிக்க உதவிடும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், செயல் ரீதியாக தொழிலாளர்களை எளிதாகக் கண்டறிய விவசாயிகளுக்கு உதவுதல், பருவந்தோறும் தொழிலாளர்களைத் தாமதமின்றி அடையாளம் காண விவசாயிகளுக்கு உதவுதல் போன்றவை இச்செயலி உருவாக்கியதன் குறிக்கோள் ஆகும்.


உழவன் செயலி குறித்த அம்சங்கள்: சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இத்திட்டத்தில் அடங்கும். இச்செயலியில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை ஆகும். இந்த செயலி விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. இச்செயலியில் ஒரே தளத்தில் விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ளலாம்.


விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் கைபேசி எண், ஆதார் எண் மற்றும் வங்கி புத்தகத்துடன் உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad