பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரி முழுவதும் சீமை கருவேல முட்கள் நிறைந்து காணப்பட்டது. இதையெடுத்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு குழுவினர் இணைந்து ஏரியில் இருந்த சீமை கருவேல மக்களை அகற்றினர்.


தொடர்ந்து, கரையோரத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்து ஊர் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு குழுவினர் இயற்கை காப்போம் அமைப்போடு இணைந்து மரம் நடும் விழாவானது நடைபெற்றது. இதில் அத்தி, காட்டு நெல்லி, நாகை, மத்தி, மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தப்பாடி கவுன்சிலர் வெண்ணிலா அருள் மொழி, துணைத் தலைவர் மணி, இயற்கை காப்போம் அமைப்பின் தலைவர் தாமோதரன் தலைமையேற்று, மாரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர்கள் செந்தில், மாதப்பன், எல்லப்பன், அசோகன், ஆசிரியர்கள் முனியப்பன், தாமோதரன், கோவிந்தசாமி, நாகராசன், சரவணன், கூத்தரசன், மலர், நடராஜ், அழகி ஓட்டல் சங்கர், வார்டு உறுப்பினர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக