மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் இரா.அருண்மூர்த்தி, ப.வினோத்குமார், இரா.மணி, இரா.மிதுனாபதி, மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் மகேந்திரன் அய்யந்துரை ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆ.சத்ரியபிரபாகரன் வரவேற்றார். மாநில மாணவர் சங்க தலைவர் வழக்கறிஞர் சி.பு.கோபிநாத், மாநில மாணவர் சங்க செயலாளர்கள் முரளிசங்கர், வழக்கறிஞர் இரா.விஜயராசா, தமிழன் பாலு ஆகிய மாணவர் சங்க மாநில பொறுப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்துக்கொண்டு மாணவர் சங்கம் செயல்படுத்தும் புதிய திட்டங்கள் குறித்து பேசினார்.
பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரு.இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில், க.மாது, க.நம்பிராஜன், ஓ.கே.சுப்பிரமணி, த.காமராஜ், ஆ.அன்பழகன், ப.சி.சிவக்குமார், து.சத்தியமூர்த்தி, பெ.நந்திசிவம், ஈ.பி.சின்னசாமி, கா.கா.சித்துராஜ், த.சக்தி, வி.பிரகாஷ், இரா.கார்த்திகேயன், ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, கி.மணி, ஆ.அன்புகார்த்திக், வே.சத்தியமூர்த்தி, மா.சதாசிவம், பெ.பழனி ம.முருகன், பூ.வெங்கடேசன், நா.வெற்றி, பெ.கோவிந்தசாமி, கேபிள்ஆறுமுகம், மா.சசிகுமார் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, மாணவர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தின் இறுதியில், மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் ப.தமிழரசு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சரியான விதிகளை பின்பற்றி சமூக நீதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற தருமபுரி மாவட்ட மாணவர் சங்க பொதுக்குழு வலியுறுத்துகிறது.
- நடப்பு கல்வி ஆண்டிலேயே வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 2000 மாணவர் சங்க உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளின் அருகாமையில் உள்ள மதுபானக் கடைகளை அரசு அகற்ற வேண்டும். தவறினால் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக விரைவில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டது.
- பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யாவின் நீண்ட நாள் கனவான அருகாமை பள்ளி திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
- கல்விக்கூடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து, போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக