இன்றைய இளம் தலைமுறையினரும் முன்னோர்கள் வாழ்வியலை அறிந்துகொள்ளும் பொருட்டு தருமபுரி தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கம் சார்பில் தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த தொல்லியல் சுற்றுலாவில் பென்னாகரம் அருகே உள்ள பூதிநத்தம் பகுதியில் நடைப்பெற்று வரும் அகழாய்வு பணிகள், அங்கு புதிய கற்காலக் கல்லாயுதங்கள், சுடுமண் பொம்மைகள், சங்ககால மட்கலங்களின் ஓடுகள் போன்றவை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களை பார்வையிட்டு, அதனைத்தொடர்ந்து ஆதனூர் கல்வட்டம், பங்குநத்தம் கல்வட்டம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.


பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயம், சுதந்திரபோராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா நினைவாலயம், செக்கோடி நடுகற்கள், அதியமான் கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு அதியமான் வரலாற்றுச் சங்க நிர்வாகிகளான முனைவர் தி. சுப்பிரமணியன், தலைவர், மருத்துவர் இரா. செந்தில் செயலாளர், வெ. இராஜன் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தொல்லியல் சுற்றுலா அழைத்து சென்றனர். இது இளம் தலைமுறையினரும் தகடூர் மண்ணின் தொன்மையும், வரலாற்று பெருமைகளையும் அறிந்துகொள்ள ஏதுவா இருந்தது என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக