மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையிலும், புதிய தொழிற்சாலைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில், 30,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் NEEDS, PM EGP, UYEGP PMPME, AABCS போன்ற பல்வேறு தொழில் கடன் மானியத் திட்டங்கள் தொழில் நிறுவனங்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத பசுமையை பாதுகாத்து, கழிவுகளை குறைத்து இயங்கும் தொழில்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் ஜெட் தரச்சான்று [ ZED - Zero Defect Zero Effect] வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை (MSME ) சார்பில் ஆய்வுக்குழுவினர் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று வகையான தரச்சான்றுகளை வழங்குகின்றனர். ZED தரச்சான்று பெற்ற நிறுவனங்களுக்கு வங்கி கடன், வட்டி சலுகை, ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ZED சான்றிதழ் பெற்ற 100 நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தீயணைப்பான்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்பட்டது. மேலும், ZED தரச் சான்றிதழ் மூலம் பெறப்படும் சலுகைகள் மற்றும் பிற வாய்ப்புகளை தருமபுரி மாவட்டத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களும் சென்று சேரும் வகையில் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கார்த்திகைவாசன், பெடரேசன் ஆப் அசோசியேசன் ஆப் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா தெற்கு மண்டல தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மையம் தொழில் ஊக்குவிப்பு அலுவலர் வெங்கடேஸ்வரி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக