தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோடியூர் கிராமத்தை சேர்ந்த கார்பெண்டர் ராஜா (வயது. 56), இவரது மனைவி செல்வி, ராஜா இன்று காலை வேலைக்காக தர்மபுரியிலிருந்து பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
சவுளுர் கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் ராஜாவின் மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் ராஜாவிற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புல்ன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக