தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஈடுபட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன் நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் நகர துணை தலைவர் பாலாஜிகுமார் மாவட்ட தொழில் சங்க தலைவர் கோவிந்தசாமி மூத்த நிர்வாகி சீதாராமன் விவசாய பிரிவு துணைத் தலைவர் காட்டுராஜா உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக