பிறந்து 3 நாடகளேயான ஆதரவற்ற பெண் குழந்தை மீட்பு; காப்பகத்தில் பராமரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

பிறந்து 3 நாடகளேயான ஆதரவற்ற பெண் குழந்தை மீட்பு; காப்பகத்தில் பராமரிப்பு.


மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள சுமார்  3 நாட்களான பெண் குழந்தை தருமபுரி மாவட்டம், அரசு மருத்துவமனையில்   அன்று ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு தற்சமயம் தருமபுரி மாவட்ட குழந்தை நலக்குழு பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.     


இக்குழந்தையின் பெற்றோர் குறித்த விவரம் ஏதும் கிடைக்கபெறவில்லை.   எனவே இக்குழந்தை குறித்த விவரம் தெரிந்தோர் உரிய ஆவங்களுடன் இச்செய்தி வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட அலுவலங்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பாலினம் : பெண்

வயது : 3 நாட்கள், 

குழந்தை கிடைக்கப்பெற்ற தேதி : 12.07.2023, 

குழந்தை கிடைக்கப்பெற்ற இடம்:  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைதருமபுரி.

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம்,

தருமபுரி.

தொலைபேசி எண்:04342  232234

6382612276

தலைவர்,

குழந்தை நலக்குழு

டொக்குபோதனஅள்ளி, நல்லம்பள்ளி(வ)

 தருமபுரி மாவட்டம்.

   

      

கருத்துகள் இல்லை:

Post Top Ad