நெல்லை டவுணில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மையத்தில் 50,000 பாட்டில்கள் பெறப்பட்டு சாதனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நெல்லை டவுணில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மையத்தில் 50,000 பாட்டில்கள் பெறப்பட்டு சாதனை.


திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா  அறிவுருத்தலின்படி திருநெல்வேலி மண்டலம் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன்  வழிகாட்டலின் படி திருநெல்வேலி மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரி முருகன் தூய்மை இந்தியா திட்டம் பணியாளர்கள் மனோஜ் முத்துராஜ் சேக் மாரியப்பன் ஆகியோர்கள்   ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தால் 1 ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளலாம் என பொதுமக்களிடம் 23/03/2023 அன்று தெரிவிக்கப்பட்டது. 


சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழைகாலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் சென்று விடுவது சாலைகளில் சாக்கடை அடைத்து சாலைகளில் கழிவுநீர் செல்வது என பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு பொது மக்கள் காலி பாட்டில்களை சாக்கடைகள் சாலை ஓரங்களில் வீசக் கூடாது என்ற நோக்கத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது அதன் படி தொண்டர் சன்னதி பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மையம் துவக்கப்பட்டது 23/03/2023 அன்று துவக்கப்பட்டது.


இன்று வரை 50559 காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்பட்டது அதற்கு உரிய தொகை ரூ 50559 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முழு ஊக்கமும் உற்சாகமும் செய்த ஆணையாளர் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.மேலும் இன்று ஒரே நாளில் 531 பாட்டில்கள் ஒருவர் கொண்டு வந்து ஒப்படைத்து பணம் பெற்றுச் சென்றார் மேலும் ஒருவர் 26 காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒப்படைத்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad