பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரைஆலை முன்பு தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரைஆலை முன்பு தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.


இதில் 33 ஆண்டுகளாக தினக்கூலியாக  பணியாற்றி வரும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சர்க்கரைத் துறை ஆணையம் மற்றும் ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்ததை கண்டிக்கதக்கதும்.


அலுவலர்களும், தொழிலாளர்களும் அரசாங்கத்திற்க்கு 2 கண்கள் ஆனால் தமிழக அரசு ஒரு தலைபபட்சமாக செயல்படுவது கண்டிக்கதக்கது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், டாக்டர் அம்பேத்கார் தொழிற்சங்கம், பணியாளர் தொழிற்சங்கம் .கரும்பு உதவியாளர் தொழிற்சங்கம், விவசாய  தொழிற்சங்கங்கள் ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad