பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி.


பாலக்கோடு, ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 05,06/08/2023  ஆகிய இரண்டு நாட்கள்  சுவாமி விவேகானந்தர் அரங்கில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


நிகழ்ச்சியின் துவக்கமாகக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஆர். முருகேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை உரையாகக் கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை கே. கோவிந்தராஜ் ஜி அவர்கள்  கல்லூரியின் நவீன வசதிகள்  மாணவிகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி நகரத்திற்கு இணையான கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். என்ற நோக்கத்துடன் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி  அவசியம் என்று தலைமை உரையாற்றினார். 


கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திரு எஸ். உதயகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி  ஆசிரியர்களுக்கான நிகழ்வு மேலும்  தங்களுடைய  அறிவு சார் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாகத் தாளாளரின் முக்கிய குறிக்கோள் இக்கல்லூரி  எல்லா வகையிலும் பல்கலைக்கழக அளவில் முதல் தரமாக விளங்க வேண்டும்.  அதற்காகத் தாளாளர் அவர்கள்  கல்லூரிக்குச் செய்து கொடுத்துள்ள அதி நவீன வசதிகள் மாணவிகளைச் சென்றடைய வேண்டும் அதற்கு இப் பயிற்சி பேராசிரியர்களுக்கு வேண்டும் என வாழ்த்திக் கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் த. ரகுநாதன் அவர்கள் பேராசிரியர்களின் திறமையான செயல்பாட்டினை எடுத்துக் கூறியும் ஒவ்வொருவரின் தனித்தன்மை மேன்மேலும் வளர வேண்டும். இது போன்ற பயிற்சி  அனைவருக்கும் தேவை என்று வாழ்த்திக் கூறினார். 


இத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு பயிற்றுநராகத் திரு. பாலாஜி ராஜேந்திரன் அவர்கள்  பெங்களூரு உலகத்தரம் வாய்ந்த ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும்  சேலம் மாண்ட் அவைசன் அகாடமி பயிற்றுநர் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்து மிகச் சிறப்பான முறையில் காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டு  பயிற்சி அளித்தார். 


இப் பயிற்சியில் பேராசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் மேலும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்வோடு மிகச் சிறப்பான முறையில் பயிற்சி வழங்கினார்.நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா. காந்தி அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். 


இந்த இரண்டு நாள் பயிற்சியில்  கல்லூரியின் பல்வேறு துறையில் பணியாற்றும்  95 பேராசிரியர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad