இதற்காக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கே.பி.அன்பழகன் அவர்கள் சைக்கிள் வழங்க பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது, இதற்காக காலை பள்ளிக்கு சென்றவர்,நேற்றைய முன் தினம் மாலையே திமுகவினர் அவசர அவசரமாக சைக்கிள் வழங்கியது தெரிய வந்தது.
இதனால் மறுபடியும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணித்து மாணவர்களிடம் சென்று திமுகவினரை பார்த்தல் பரிதாபமாக உள்ளது. இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்ததால் இப்போதே அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்களை முன்னிலை படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதை நினைத்து பரிதாபமாக உள்ளது.
என்னிடம் சொல்லி இருந்தால் நானே அவர்களை சைக்கிள் கொடுக்க அனுமதி அளித்திருப்பேன். என கூறியதோடு மீதம் உள்ள சைக்கிள்களை அவரையே கொடுக்க சொல்கின்றேன் பெற்று கொள்ளுங்கள், நான் வருகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியது, மாணவர்களுக்கு மட்டுமின்றி பள்ளியிலிருந்த ஆசிரியர்களுக்கே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக