தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்தில் நாளை மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நலத்திட்டங்களே - திராவிட கொள்கைகளே என்ற தலைப்பில் சிறப்புபட்டி மன்றம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன் அவர்களின் தலைமையில் நடைப்பெற உள்ளது. இதில் தமிழ்நாட்டு பாடநூல் கழக தலைவரும், கழக கொள்கை பரப்பு செயலாளரும், நகைச்சுவை தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக செயலாளர்கள், சார்பு அணியின் அமைப்பாளர்கள், துனை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக