சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதிய முறையை அகற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் சி.சின்னதுரை தலைமை தாங்கினார் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.வெங்கடாசலம் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில்,
- கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்
- இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கிட வேண்டும்
- பத்தாண்டுகளுக்கு மேல் தினக்கூலியாக பணிபுரிந்து வரும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
- அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்த கூடிய ஈட்டிய விடுப்பை நிறுத்திவைக்கும் உத்தரவினை தொழிலாளர்களுக்கும் நிறுத்தி வைத்துள்ளதை உடனே வழங்கிட வேண்டும்
- தேர்தல் வாக்குறுதியில் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு 4000 காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக