தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரூர் சரக அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்பெனடிக் தலைமை வைத்தார் சரக இணைசெயலாளர் மேகநாதன் அனைவரையும் வரவேற்றார் சரக செயலாளரும் சிந்தல்பாடி அரசு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியருமான ஜெயவேல் உதவி தலைமை ஆசிரியர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு போட்டியினை துவைக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அரூர் பேரூராட்சி உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான முல்லைரவி, அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி, ஆசிரியர்கள் சிந்தை அ.வேடியப்பன், மூ.சிவக்குமார், பழனிதுரை, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக