தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் மரம் நடும் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. இதில் புங்கை, வேம்பு, நாவல், பூவரசு உள்ளிட்ட மரகன்றுகள் நடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்பரப்பட்டி பேரூராட்சி தலைவர் திருமதி.பிருந்தா அவர்கள் முதல் மரக்கன்று நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை கணக்கர் அபுபக்கர் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக