எனது மண், எனது தேசம் திட்டத்தின் மாபெரும் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

எனது மண், எனது தேசம் திட்டத்தின் மாபெரும் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா.


மத்திய அரசின் தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து எனது மண், எனது தேசம் திட்டத்தின் மாபெரும் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா இன்று நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பழனி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ஏளகிரி ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை வகித்தார். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, ஊராட்சி உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி இணை இயக்குநர் திருமதி. மாலா, மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து வளர்ச்சி நேர்முக உதவியாளர் மரியம்ரெஜினா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்திய லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், பாகலள்ளி ஊராட்சி தலைவர் முருகன், முன்னாள் இராணுவ வீரர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக பழனி கவுண்டன் கொட்டாய் சிறுதுளி இளைஞர் நற்பணி மன்ற கவுரவ தலைவர் முத்துலிங்கம் நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் 200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad