காரிமங்கலத்தில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

காரிமங்கலத்தில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.


தர்மபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக  உணவு பகுப்பாய்வு வாகனம் (food safety on wheels) மூலம்  மாவட்டம் முழுவதும் சென்று உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறிதல்  மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த  விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 


நேற்றைய தினம், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் நடமாடும் பகுப்பாய்வு வாகனம் பொறுப்பாளர் முதுநிலை பகுப்பாய்வாளர். சாமுண்டீஸ்வரி அவர்கள் வழிகாட்டல் படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்டோர் குழுவாக சென்று காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர். 

முதல் நிகழ்வாக காரிமங்கலம் அரசு மகளிர் அறிவியல் கலைக்  கல்லூரியில்  ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை பேராசிரியர் முனைவர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் மற்றும் கௌரவ விரிவுரையாளர் தனலட்சுமி முன்னிலையில் கல்லூரி முதல்வர்  முனைவர் சௌ. கீதா, அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன்  உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்டோர் உணவுப் பொருட்களைக் கொண்டு குறிப்பாக தேயிலை, தேன்,  நெய், மஞ்சத்தூள் மிளகு, வெல்லம், பச்சை பட்டாணி, சாயம் ஏற்றப்பட்ட காய்கறிகள், முட்டை, அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டறிதல் வேறுபாடு அறிதல் குறித்தும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்தும் மேலும் செறி ஊட்டப்பட்ட அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, பால் மற்றும் கோதுமை மாவு போன்றவற்றில் செறி ஊட்டப்படும்  நுண்ணூட்டச் சத்துக்கள்  எப்(F) குறியீடு குறித்து நேரடியாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கம் செய்தனர். 


மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய இவ்வாகனத்தில் வசதிகள் உள்ளன. வாகனத்தில் உள்ள ஆய்வக பரிசோதனை  மூலம் உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து  உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமான பொருட்கள் நுகர்வோரை சென்றடைய முயற்சி மேற்கொள்ளும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர். 


நிகழ்வுக்கு பின்பு காரிமங்கலம் வார சந்தையில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. ஆயிஷா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கோபி மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், சந்தை கடைக்காரர்களுக்கும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் தரமான பொருட்கள் வாங்குவது குறித்து பகுப்பாய்வு வாகனத்தைக் கொண்டு விழிப்புணர்வு செய்தனர்.


விழிப்புணர்வு தொடர்ச்சியாக  மாவட்ட முழுதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad