தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலங்கள் புனரமைக்கும் பணிகளுக்கான முன்மொழிவினை அனைத்து தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலங்கள் புனரமைக்கும் பணிகளுக்கான முன்மொழிவினை அனைத்து தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


தருமபுரி மாவட்டத்தில் மதவழி சிறுபான்மையினர்களான கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலங்களான கல்லறை தோட்டங்கள் மற்றும்  கபரஸ்தான்களுக்கு சுற்றுச்சுவர் (Compound wall) அமைத்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் இதர புரமைக்கும் பணிகளுக்காக நிதியுதவி வழங்கும் திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 


இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கல்லறைதோட்டம் () கபரஸ்தான்களில் பழுதடைந்த சுற்றுச்சுவர் () பாதைகளை சீரமைக்கவும் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கும் புதிதாக தோற்றுவிக்கப்படும் கல்லறை தோட்டங்கள் மற்றும் கபரஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர்,பாதை மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கும் நடப்பு  2023 - 2024 ஆம் ஆண்டிற்கு  ரூ.1.00 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லறைதோட்டங்கள் மற்றும் கபரஸ்தான்களுக்கு சுற்றுச்சுவர், பாதை () இதரதேவைகள் ஏதுமிருப்பின் அதற்கான முன்மொழிவினை (மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் மற்றும் தேவைப்படும் செலவினம் குறித்து தொகுதி மேம்பாட்டு அலுவலக பொறியாளர்/பேரூராட்சி/நகராட்சி கட்டிட பொறியாளரிடம் பெற்ற விலைப்புள்ளியுடன்தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி) நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad