தமிழகம் முழுவதும் போதை பழக்கத்தை அறவே வேரறுக்க தமிழக அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று தமிழக முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏற்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் நல்லானூர் அருகே மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் என மொத்தம் 300 மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். ஒன்று கூடி வாருங்கள் போதையை ஒழிப்போம் வாழ்வில் ஜெயிப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார், பெருமாள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக