கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது. இந்திய அளவில் 2.40 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் 3 வது பெரிய கட்சி என்றும், வரும் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றியை பெற்று திருட்டு திராவிட திமுக அரசு நிறுத்திய மக்கள் நலத்திட்டங்களான, முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், மடிக்கணிணி, மகளிர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் செயல் படுத்துவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ராமநாதன், கருக்கனஅள்ளி கிளை செயலாளர் சங்கர், அவைத் தலைவர் மாதையன், மேலவை பிரதிநிதி கண்ணூரான், இளைஞர் பாசறை செயலாளர் மாதுராஜ், நிர்வாகிகள் முல்லை பிரகாஷ், பிரபு, ரவி மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக