தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம் முன்னிலை வகித்தார். போளையம்பள்ளி ஊராட்சி தலைவர் கலைமணி மாயக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சகிலா, மாவட்ட கவுன்சிலர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பாரதப் பிரதமரின் ஐந்து கொள்கைகள் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக