நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரங்கள், கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் நாகனூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் அருகில் 10 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிப்பாடு செய்யப்பட்டது. நாகனூரில் தொடர்ந்து 18 வது ஆண்டாக விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. பூஜையில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வெற்றி விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரசாதம், பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வெற்றி விநாயகர் நற்பணி மன்றத்தை சார்ந்தவர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ்வழிப்பாட்டில் கலந்து கொண்டனர். இன்று இரவு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக