நூறுநாள் திட்டத்திற்கு உரிய நிதி மற்றும் வேலை, வழங்ககோரி அக் -11 ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

நூறுநாள் திட்டத்திற்கு உரிய நிதி மற்றும் வேலை, வழங்ககோரி அக் -11 ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.


அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் செப்-27,28,ஆகிய தேதிகளில் நடைபெற்றது.


சங்கத்தின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார், சங்கத்தின் இணை செயலாளர் டாக்டர் சிவதாசன் எம்பி, அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், தமிழ்நாடு பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் அ.பழநிசாமி மாநில துணைத் தலைவர்கள் பி வசந்தாமணி, சி.துரைசாமி அது.கோதண்டன், மாநில செயலாளர்கள் வீமாரியப்பன் எஸ்.சங்கர், பூங்கோதை, க.சண்முகவள்ளி, பிரகாஷ் தருமபுரி மாவட்ட செயலாளர் எம்.முத்து  மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு 

  • நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலி பாக்கியை ஒன்றிய அரசு உடனே வழங்க வலியுறுத்தும் தீர்மானம்
  • தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் அமலாக்கம் செய்யப்படும் நூறுநாள் வேலை திட்டத்தில் 1 மாதம் முதல் 4 மாதம் வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் மோடியின் ஒன்றிய அரசாங்கம் திட்டத்தை சீரழித்து வருகிறது.
  • வேலை செய்த தொழிவாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அடிப்படையான உணவு தேவை, சுகாதாரம், மூத்த குடிமக்கள், குழந்தைகள் பராமரிப்பு செய்ய முடியாமல் தினறி வருகிறார்கள்
  • நூறுநாள் வேலை சட்டப்படி வேலை செய்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். என்ற சட்டத்தை அமலாக்க மோடியின் அரசு மறுத்து வருகிறது. 3 மாதங்களுக்கு மேல் ஊதியம் கொடுக்கப்படாமல் இருப்பது, சட்ட விரோதமானது, நூறுநாள் வேலை சட்டம் 15 நாட்களுக்கு பிறகு காலதாமதமாக கொடுக்கப்படும் ஊதியத்திற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்பதை சட்டம்தெளிவுபடுத்தியுள்ளது. உச்சநீதிமன்றமும் கால தாமதமாக வழங்கும் ஊதியத்திற்கு வட்டி சேர்த்து வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
  • மோடியின் ஒன்றிய அரசாங்கம் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தலையீடுகள் எதையும் மதித்து செயல்படுத்தவில்லை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் 33 சதவீதம்  குறைத்ததன் காரணமாகவே ஊதியம் நிலுவையில் இருக்கிறது என்பதை கவனப்படுத்துகிறோம் மேலும் ஒதுக்கீடு செய்த நிதி ஒதுக்கீடட்டிலும் கூட ஒன்றிய அரசோடு இணைந்து போகாத மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு இழுத்தடிப்பு செய்கிறது. இத்தகைய அரசியல் காரணங்களால் கிராமப் புறங்களில் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக கிராமப்புற மக்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் சூழல் அதிகரித்து வருகிறது.
  • கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் கூலி தொழிலாளர்களின் ஊதியம் ரூ.1300 கோடிக்கு மேல் பயன்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசின் கஜானாவில் செலவழிக்கப்படாமல் கிடக்கிறது.
  • ஒன்றிய அரசை வற்புறுத்தி காலதாமதம் இல்லாமல் ஊதிய பாக்கியை பெற்று தர தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் நூறுநாள் வேலை அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 55 சதமானம் வரையே வேலை நடைபெறுகிறது. 
  • சட்டக் கூலியும் தமிழ்நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்படவில்லை. ஆகவே தமிழ்நாடு அரசு திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்ய வலியுறுத்துகிறோம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 11 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • நகர்புற நூறுநாள் வேலைத்திட்டம் 2022-23 ம் ஆண்டிற்கு  நகர்புற வேலைக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கவில்லை உடனடியாக நிதி ஒதுக்கவேண்டும்.
  • கலைஞர் மகளீர் உரிமை திட்டத்தில் தகுதி இருந்தும் விடுபட்டவர்களை இணைத்து மாதம் ஆயிரம் வழங்கவேண்டும்.தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே அரசி, எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் காவிரி மேலாண்மை வாரியத்தின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசும் ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad