தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் தீபாவளி - 2023 பண்டிகைக்கு ரூ.185.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 செப்டம்பர், 2023

தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் தீபாவளி - 2023 பண்டிகைக்கு ரூ.185.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் தீபாவளி - 2023 பண்டிகைக்கு ரூ.185.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தள்ளுபடி விலையில் ஜவுளிகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தீபாவளி - 2023 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நாச்சியப்பா கவுண்டர் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி - 2023 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (23.09.2023) குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.


இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல்தொடங்கப்பட்டு 88 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும்வகையிலும் தொடர்ந்து வேலைவாய்பினை வழங்குவதற்காக விழாகாலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கிவருகிறது.


இந்தாண்டு தீபாவளி 2023-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டுபுடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் பிரிண்டட்படுக்கைவிரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகின்றது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும்.


அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு-2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் சுமார் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு -2023 தீபாவளி பண்டிகைக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகைக்கு ரூ.150.00 இலட்சம் மற்றும் அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.35.00 இலட்சமும் என 2 விற்பனை நிலையங்களுக்கும் ரூ.185.00 இலட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300/- முதல் ரூ.3000/- வரை இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும், 11 மாதசந்தா தொகையை அங்கத்தினர் செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.


கடன் விற்பனை தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டில்லா கடன் வசதியில் 30% வரை யிலான தள்ளுடி வழங்குகிறது. தற்போது தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையம் கடைஎண். 11, நாச்சியப்பா கவுண்டர் தெரு, தருமபுரி– 636 701. என்ற முகவரியில் (தொலைபேசி எண். 04342-260145) இயங்கி கொண்டு இருக்கின்றது.


முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து திருமதி.அ.செ.மௌனலிசா அவர்களுக்கு முதல்விற்பனையை வழங்கி தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.சு.காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர் திரு.பா.சுப்ரமணியன், தருமபுரி நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளர்கள் திருமதி.லூ.ரெஜினா, திரு.கு.சுதாகர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad