தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2023-24ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் மேற்படி 2023-24-ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் G+ர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை - 05 (தொலைபேசி எண்.044-29515942, மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com) என்ற முகவரிக்கு G+ர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2023-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad