தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டமான LHDCP - PPR-EP-ன் கீழ் 2023-ஆம் ஆண்டில் தகுதியுள்ள 3,17,700 வெள்ளாடுகள் / செம்மறியாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த 27.09.2023 அன்று முதல் தொடங்கி 30 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.. இத்திட்டத்தின் கீழ் 4 மாத வயதிற்கு மேற்பட்ட சினையற்ற வெள்ளாடுகள் / செம்மறியாடுகளுக்கு இத்தடுப்பூசி போடப்படுகிறது.
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, குறிப்பிட்ட நாளில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணியினை மேற்கொள்ளும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட சினையற்ற வெள்ளாடுகள் / செம்மறியாடுகளை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு கொண்டு வந்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியினை தவறாது போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக