தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் கரும்பு 1 டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாயவழங்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை அரசாங்கமே ஏற்க வேண்டும், சர்க்கரை ஆலை பள்ளியில் நடைபெறும் நிதி முறைகேட்டை விசாரிக்க வேண்டும், மேலும் பல்வேறு முறைக்கேட்டில் ஈடுபடும் பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
20 வருடங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஆலை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது. அதுசமயம் ஆலை தொழிலாளர்கள், விவசாயிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக