பஞ்சப்பள்ளி சின்னாறு அணை இலங்கை தமிழர் முகாமில் 3 கோடி 18 இலட்சத்து 51ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடியிருப்பு வீடு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சின்னாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர்களுக்கென 3 கோடியே 18 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் இனைப்புக்கள், தெருவிளக்கு, மின் இணைப்பு, தெரு சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட 50 தனி தனிவீடுகளை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிக்கு சமையல் பாத்திரம் அடங்கிய தொகுப்புடன் வீட்டு சாவியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி, பாலக்கோடு தாசில்தார் ராஜா, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தாசில்தார் வெண்மணி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக