மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்ட அரசு கலைக்கல்லூரி கூட்டரங்கில் சிறுதானிய திருவிழாவினை தொடங்கிவைத்து, மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சியினை திறந்து வைத்து, 314 பயனாளிகளுக்கு ரூ.25.26 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (26.09.2023) வழங்கினார்கள்.
இவ்விழாவில் மேலாண்மை இயக்குநர்/ தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சிறுதானிய திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.
இச்சிறுதானிய திருவிழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 300 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி மற்றும் வங்கி கடன் உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் என மொத்தம் 314 பயனாளிகளுக்கு ரூ.25.26 கோடி (ரூ.25,26,44,300/-) மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், இச்சிறுதானிய திருவிழாவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்கள். மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு ஊரக வாழ்தார இயக்கத்தின் சார்பில் சிறுதானிய பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டு, சிறுதானிய உணவு செயல்முறை கையேடுகளை வெளியிட்டார்கள்.
சிறுதானிய உணவு பொருட்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு சிறுதானிய கூட்டமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் சிறுதானியத்திலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள் மற்றும் வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் அறிவியல் நிலையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ”மதி” சிறுதானிய சிற்றுண்டியகத்தினை மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கூடுதல் இயக்குநர் திருமதி. எஸ்.கவிதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு. சஞ்சீவி குமார், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி (தருமபுரி), வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் (நல்லம்பள்ளி) உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக