வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.


1987 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ம் நாள் நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கீடு தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு ஆளாகி உயிர் தியாகம் செய்த 21 தியாகிகளின் 36ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாரியாதை செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன் தலைமையில்  தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் கலந்து கொண்டு, தொடர்சாலை மறியல் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளையும், போராட்டத்திற்கு பிறகு 108 சமுதாயங்களையும் இணைத்து இடஒதுக்கீடு பெறபட்டவை குறித்தும், 21 ஈகையர்களின் உயிர் தியாகத்தால் பெறப்பட்ட இடஒதுக்கீட்டால் 108 சமுதாயங்களின் இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தின் நிலை குறித்தும் விரிவாக பேசினார்.



மேலும் இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரு.செந்தில் பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad