சிவசேகர், இவருடைய மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி கணவன்,மனைவி இருவரும் அவரவர் பணிக்கு சென்றிருந்தபோது, மதியம் வீட்டில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா, மற்றும் இவருடைய வயதான உறவினர் ஆகிய இருவர் இருந்துள்ளனர், கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டினில் நுழைந்து தான் உங்கள் மருமகள் ஜெயந்தியினுடைய தோழி என தெரிவித்து, அவர்களிடம் நலம் விசாரித்து பேசத் தொடங்கியுள்ளார்.
வாங்கி வந்த ஆப்பிள் ஒன்றை மூதாட்டிக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்க அந்த மூதாட்டி சாப்பிடவே சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார், திட்டமிட்டபடி சரியான சமயத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த அடையாளம் தெரியாத பெண் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை சத்தமே இல்லாமல் அள்ளிக்கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி மாயமாகாயிருக்கிறார் அந்தப் பெண்.
காரில் ஏறி மாயமான அந்த பெண் யாராக இருக்கும் என சந்தேகித்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது தான், காரில் வந்து சத்தமே இல்லாமல் பணம், மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது, சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான மைதிலியாகத்தான் இருக்கும் என வலுவான சந்நேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து, மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக