தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாதுராஜ் (வயது.40) இவரது தந்தை சின்ன மாதன் (வயது .75) இவர் கடந்த 6 மாதங்களாக மனநலம் சற்று பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார், அவ்வப்போது அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு திரும்பி வந்து விடுவார்.
கடந்த 21ம் தேதி காலை வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, அவரது மகன் மாதுராஜ் மற்றும் குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் தந்தை கிடைக்காததால் தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் மாதுராஜ் புகார் அளித்தார், புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணமால் போன முதியவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக