இத்திட்டத்தின் துவக்கத்தில் ஒருவேளை மட்டும் 30 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது, இன்று இது படிப்படியாக உயர்ந்து இன்று மதியம் மற்றும் மாலை இரண்டு வேளைகளும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி விழா காலங்களில் இல்லங்களின், விழாக்களில் அதிகமாக இருக்கும் உணவுகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த திட்டம் மூலம் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டம் இன்றுவரை தொய்வின்றி நடைபெற உதவியாக இருந்துவரும் மை தருமபுரி தன்னார்வலர்கள் தமிழ்செல்வன், அருணாசலம், வினிதா, அருள் மணி, ஜாபர், ஹரிஷ், சந்திரசேகர், சபரி முருகன், பனிமலர் சதீஸ் குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என மை தருமபுரி தன்னார்வலர்கள் அமைப்பின் தலைவர் திரு. சதிஷ் குமார் ராஜா அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய 900வைத்து சிறப்பு நாளில் சிறப்பு விருந்தினராக தருமபுரி செந்தூர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீரமணி, ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக