பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.


தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி , ஆங்கிலத்துறை, உதவி பேராசிரியர் திரு. பிரசாத் ஆரோக்கியசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அல்கரிதமிக் க்யூரேசன் இன் த ரேல்ம் ஆப் லிட்ரேச்சர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

இவர் தனது உரையில் இலக்கிய உலகில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் பற்றியும் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் உதவியைக் கொண்டு எவ்வாறு இலக்கிய படைப்புகள் வெளிவரும் என்பதை பற்றியும் மிக தெளிவான ஒரு உரையை எடுத்துரைத்தார். மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாணாக்கர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு எளிமையாகவும் விரிவாகவும் விடையளித்தார். 


ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ.) முனைவர். மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்ற,  துறைத் தலைவர் முனைவர் சி.கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து ஆங்கிலத் துறையின் உதவி பேராசிரியரும் இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர். கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். ஆய்வியல் நிறைஞர் மாணவி செல்வி. நந்தினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். 


முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் முதலாம் ஆண்டு மாணவி செல்வி. மதுமிதா வரவேற்க,  இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. நிவேதிதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வை முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி அஸ்வினி தொகுத்து வழங்கினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad