ஒகேனக்கல் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடாக அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஒகேனக்கல் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடாக அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.


காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடாக அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர் மாநிலத்தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர் வீ.அமிரதலிங்கம், பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் எம்.சிவா, மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன், பி.பாண்டியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் சி.ராஜா, பி.கிருஷ்ணவேணி, வெங்கடாச்சலம், செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.


அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர் பேசுகையில்:  உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரி நீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது.தண்ணீர் தரவில்லை என்றால் தமிழ்நாட்டின் நெற்கலைஞியம் வறண்டு போகும், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும்.ஒன்றிய அரசு தண்ணீர் தர நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு காவிரி நீர் பங்கீட்டை வைத்து பிஜேபி இரட்டை வேஷம் போடுகிறது அரசியல் செய்கிறது.


வரும் கர்நாடகத்தில் தோல்வியை தழுவிய பிஜேபி, வரும் தேர்தலை கணக்கில் கொண்டு ஆதாயம் தேட நினைக்கிறது. இவர்களை  மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கடந்த 10 ஆண்டுகாலம் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத மோடி, எங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தால் பொருளாதாரத்தில் முன்னோற்றுவேன், என்று சொல்கிறார் இதையெல்லாம் நம்ப மக்கள் தயாராக இல்லை, காவிரி தண்ணீரை நம்பி 15 மாவட்டங்களில் 20 இலட்சம் கூலி தொழிலாளர்கள் உள்ளனர், விவசாயிகள் உள்ளனர், விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர், இவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்.எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் தர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.


மாநில தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசியதாவது: உலகநாடுகளில் சராசரியாக  1170 மில்லிமீட்டர் மழை பெய்கிறது, இதன் விளைவாக  பூமியின் மேற்பரப்பில் 1மீல்லிமீட்டர் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. மற்ற நாடுகள் 250 சதவீதம் மழைநீரை சேமிக்கின்றனர். இந்தியாவில் வேறும் 7 சதவீத மழைநீரையேசேமிக்கின்றனர்.மீத தண்ணீர் கடலில் கலக்கிறது.


இந்தியாவில் நீர்மேலாண்மைக்கு எந்த திட்டமும் இல்லை தேர்தலின் போது பிஜேபி அரசு நதி‌நீர்இணைப்பு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும், ஆனால் கடந்த 9 ஆண்டுகால பாராளுமன்றத்தில் நீர் மேலாண்மை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச அனுமதிப்பதில்லை, மாறாக கார்பரேட்களுக்கு சேவை செய்யும் அரசாக உள்ளது. தொழிலாளர், விவசாய ,விவசாய தொழிலாளர் விரோத போக்கை மோடி அரசு கடைபிடித்து வருகிறது.என பேசினார்.


மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பேசியதாவது: விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர் நலனுக்காக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 இலட்சம், விவசாய குருவை சாகுபடி  நிலங்கள் உளளது. தண்ணீரை நம்பி விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் உள்ளனர்.

தற்போது கூட திருவாரூரில் விவசாயம் பயிர் காய்ந்து போனதால் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். காவிரி நீரை நம்பி 27 மாவட்டங்கள் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பு படி தமிழ்நாட்டிற்க்கு தரவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை இணைத்து போராடுவோம் என பேசினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad