பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் அருணகிரி அனைவரையும் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் அன்பரசு இயற்கை பயிர் சாகுபடி குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் அங்கக வேளாண்மை முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் திருமதி.ஜெயமாலா விதைச்சான்று அலுவலகத்தில் பதிவு செய்யும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார், இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திருமதி .கோகிலா மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி .சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர் .
இப்பயிற்சியில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்து வரும் முன்னோடி மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தனசேகரன், பஞ்சகாவியா மீன்அமிலம், ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், இஞ்சி பூண்டு கரைசல், நீர்மோர் கரைசல் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்து செயல் விளக்கமும் செய்து காண்பித்தார்.
மேலும் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் விஞ்ஞானி டாக்டர். தம்பிதுரை கலந்து கொண்டு பாரம்பரிய வேளாண் சாகுபடியில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்து எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திருமதி. கோகிலா செய்திருந்தனர்.
இதே போன்று பெரும்பாலை கிராமத்தில் பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் அன்பரசு வரவேற்று இயற்கை பயிர் சாகுபடி குறித்து எடுத்துரைத்தார்.தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் திருமதி .ஜெயமாலா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் திருமத.சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திருமதி தமிழ்செல்வி செய்திருந்தார் .
- செய்தியாளர் இர்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக