வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்கா வண்ணம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.09.2023) தருமபுரி நகராட்சி பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி நகராட்சி வார்டு எண்.26-இல் கொல்லஅள்ளிரோடு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்கள். நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குமாரசாமிபேட்டை, பென்னாகரம் ரோடு, 10-வது வார்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, பணியினை விரைவாக முடித்திட அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தருமபுரி நான்கு ரோடு பகுதியில் சரி செய்து கொண்டிருந்த பாதாள சாக்கடை இணைப்பு பணியினை நேரில் ஆய்வு செய்தார்கள். பின்னர், வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்கள்.
இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் திருமதி.புவனேஷ்வரி, துப்புரவு அலுவலர் திரு.ராஜரத்தினம், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக