இக்கிராமத்தில் பெரும்பாலும் உள்ள பெற்றோர்கள் எழுதபடிக்க தெரியாத விவசாய கூலிகளாக உள்ளதால் தங்கள் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து போதிய விழிப்புணர்வு இன்றி இருந்தனர். இதனால் இப்பகுதியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் போதிய முன்னேற்றம் இன்றி காணப்பட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்களுக்கு கல்வி அளிக்க திட்டமிட்டனர். இதற்காக வனத்துறைக்கு சொந்தமான சமுதாய வன கட்டிடத்தை பெற்று கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வந்தனர்.
இப்பயிற்சி வகுப்பினை இன்று வனவர் முருகானந்தம் பார்வையிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர் இளைஞர்களிடம் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில வனத்துறையினர் மற்றும் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக