மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.09.2023) மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களின் நிலை, பட்டா மாறுதல் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை, இ-சேவை மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை பற்றியும், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், 104  சேவைக்கான கட்டுப்பாட்டு அறை, அறுவை சிகிச்சைகளின் செயல்திறன் பற்றியும் கல்வித்துறையின் சார்பில் 10,12-ஆம் மாணாக்கார்களின் தேர்ச்சி மற்றும் கற்றல் திறன், உயர்கல்வி சேர்க்கை மற்றும் கல்விசார் செயல்திறன், நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் நிலை குறித்தும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, அங்கன்வாடி கட்டமைப்பு, புதுமைப்பெண் இரண்டாம் கட்டத்திட்டம் பற்றியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) (PMAY-G), 15-வது ஒன்றிய நிதிக் குழு பணி முன்னேற்றம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசன செயல்பாடுகள், வேளாண்மை துறை பயிர் சாகுபடி பரப்பு, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள், e-NAM பற்றியும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் சார்பில் ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல்திறன் பற்றியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு மற்றும் செயல்திறன் பற்றியும் உள்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு பற்றியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், தருமபுரி மாவட்ட முத்திரை திட்டங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கான அரசின் முக்கிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். 


மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டங்களின் வளர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும், பொதுமக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும், வாழ்வாதார உயர்விற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும் துறை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


இந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசு செயலாளர் மரு. தாரேஸ் அகமது இஆப., மேலாண்மை இயக்குநர்/ தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் திருமதி ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் திரு.அப்பல்ல நாயுடு, இ.வ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.ஆர்.பிரியா உட்பட அனைத்து துறை தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad