தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பில் பென்னாகரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறி. கருப்பண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது,
சிறப்பு அழைப்பாளர்களாக மேலிட தேர்தல் பொருப்பாளர்கள் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும் நற்குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகள், முகாம் மறு சீரமைப்பு, உறுப்பினர் புத்தகம் வழங்குதல், வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் மணி விழா நிறைவு மாநாடு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் நடைபெற உள்ள மாநாட்டில் தமிழக முதலமைச்சர் தலைமையில், தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், மண்டல செயலாளர் தமிழ் அன்வர், மண்டல து.செ. மின்னல் சக்தி முன்னாள் மாவட்டச் செயலாளர் த. ஜெயந்தி,மாவட்ட பொருளாளர் மன்னன் கி.அதியமான் ,மா.துணை செ. (இ. சி. எ. பா ) இ மு கிள்ளிவளவன், மா. துணை வி அணி அ.திருமாறன், மாநில துணை செயலாளர் தொண்டரணி, ஒன்றிய செயலாளர்கள் மொரப்பூர் திருலோகு, பென்னாகரம் வடக்கு பெ.அம்பேத்குமார் பென்னாகரம் தெற்கு சரவணன் எரியூர் கார்த்திக், சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் மு.வீர செங்கோலன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மு விஜயகுமார் காட்சி ஊடக மையம், செ மகிழ்வளவன் கோ மணி மீனவர் அணி மா தொண்டரணி செந்தில்குமார், விஜயகுமார், தங்கராஜ், விடுதலை மதி மாவட்ட இளைஞரத்திகள் எழுச்சி பாசறை அமைப்பாளர், பேரூராட்சி செயலாளர்கள் பென்னாகரம் லட்சுமணன் காரிமங்கலம் அம்பேதகர், கம்பைநல்லூர் ராபர்ட் சொக்கன் பாப்பாரப்பட்டி கணபதி, ஒன்றிய பொருளாளர்கள் க.ச.ராஜா பிகே மாது, ஒன்றிய துணைச் செயலாளர்கள் மா மோகன், ஏரியூர்,சி சரவணன் பென்னாகரம் தெற்கு,பிரகாஷ் பென்னாகரம் வடக்கு, காரிமங்கலம் முருகேசன், வால்டர், பேரூர் துணைச் செயலாளர்கள் சேட்டு சக்தி வேலு கம்பைநல்லூர், ஆட்டோ நாகராஜ் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை களப்பணியாளர்கள் ரா.அருள்குமார் சக்தி கார்த்திக் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக