மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சாதனை, மாவட்ட ஆட்சியர் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சாதனை, மாவட்ட ஆட்சியர் பாராட்டு.


தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் உலக இளைஞர் திருவிழாவின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான 5 கிலோமீட்டர் மாரத்தான் போட்டிகள் 09-09-2023 அன்று நடைபெற்றது.


அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆடவர் மட்டும் மகளிர் பிரிவில் முதல் இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.


வெற்றி பெற்றோர் விவரம் : ஆடவர் பிரிவில் ஏ.கலையரசு மூன்றாம் ஆண்டு சமூகப் பணி மாணவர் முதலிடம் மற்றும் 10000 ரூபாய் பரிசுத்தொகை.

 

மகளிர் பிரிவில் D.ஷாலினி இளம் அறிவியல் - தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி முதலிடம் மற்றும் 10000 ரூபாய் பரிசுத்தொகை.


S.லட்சுமி மூன்றாம் ஆண்டு BCA மாணவி இரண்டாம் இடம் - 7000 ரூபாய் பரிசுத்தொகை.


S.சீதா இளங்கலை வரலாறு முதலாம் ஆண்டு மாணவி - நான்காம் இடம் -1000 ரூபாய் பரிசுத் தொகை, வெற்றி பெற்ற தர்மபுரி அரசு கலைக்கல்லூரி  மாணவ மாணவிகளுக்கு இன்று 20-09-2023 காலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்தினார்.


மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் 23-09-2023 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியயைச்சசார்ந் மாணவ மாணவிகள் தர்மபுரி மாவட்டத்தின் சார்பாக பங்கேற்க உள்ளனர். 


வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் அவர்களையும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன், அனைத்து துறை பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad