இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடர்பு மையம் அமைத்திட 6 தற்காலிக பணியிடங்கள் வெளிச்சந்தை (Outsourching) நிறுவனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 5 அலுவலர்கள் கொண்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணிக்கு 2 தற்காலிக பணியிடங்கள், திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் பணிக்கு ஒரு தற்காலிக பணியிடம் ஆகியவற்றிற்கு மாதாந்திர ஊதியம் ரூ.35,000 வழங்கப்படும். கல்வித்தகுதி சுற்றுச்சூழல் பொறியியல் (ENV Engineering) அல்லது கட்டட பொறியியலில் (CIVIL Engineering) பட்டப் படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணர் ஒரு தற்காலிக பணிக்கு கல்வித்தகுதி பிடெக், எம்எஸ்சி, எம்.பிஏ. அல்லது அதற்கு நிகரான பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.35,000 வழங்கப்படும். தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணிக்கு இரண்டு தற்காலிக பணியிடங்கள் மாதாந்திர ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு (MASS COMMUNICATION / MASS MEDIA) முடித்திருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி 636705 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக