அதன் ஒரு பகுதியாக காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் மேற்பார்வையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் காரிமங்கலத்தில் மொரப்பூர் ரோடு, புறவழிச் சாலை, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, கரகோடள்ளி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் தாபாக்கள், துரித உணவகங்களில் சவர்மா, தந்தூரி, கிரில்டு சிக்கன்,பார்பிக்யூன் சிக்கன், மட்டன், மீன் இறைச்சி, பிரியாணி, துரித உணவுகள் முறையாக தயாரிக்கப்படுகின்றவா, தயாரித்த உணவின் தரம் குறித்தும், ஃப்ரீசர், குளிர்பதன பெட்டிகளில் வைத்து இருக்கும் பொருள்கள் உரிய காலாவதி தன்மை உடையதா என கண்காணிக்கப்பட்டது.
ஆய்வில் ஒரு சில உணவகங்களில் இருந்து சுமார் ஏழு கிலோ அளவுக்கு பழைய சவர்மா, தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் இரண்டு லிட்டர் அளவு, செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேற்படி தவறிழைத்த மூன்று உணவகங்களுக்கு, நியமன அலுவலர் உத்தரவுபடி தலா ஆயிரம் வீதம் 3 உணவு உரிமையாளர்களுக்கு 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவக உரிமையாளர்கள் உணவுகளை சுகாதாரமான முறையிலும், இறைச்சிகள் புதியதாகவும் அதிகம் இருப்பு வைக்காமல் அன்றாட தேவைக்கு அளவு வாங்கி உணவு வகைகள் தயார் செய்யவும், தேவையற்ற செயற்கை நிறமூட்டிகள், ரசாயனம் சேர்க்காமலும் நாள்பட்ட இறைச்சிகள் பயன்படுத்தாமல் விற்பனை செய்யவும் அறிவுறுத்தியதுடன், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்யவும் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக