தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தைச் சார்ந்த செட்டி மகன் ரவீந்தர், (44) விவசாயி இவர் தோட்டத்தில் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர் இரண்டு பால் மாடுகளை வளர்த்து வருகிறார்.
ரவீந்திரன் வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து நேற்று ஆண் கன்று ஒன்றை இயன்றது. அந்தக் கன்றுக்கு இரண்டு தலை ஒட்டிப் பிறந்த கால்களும் நான்கு மட்டும், இரு இரு தலைகளுக்கும் தனித்தனியே கண்கள், வாய், மூக்கு, என இரண்டாக அதிசயமாக பிறந்துள்ளது. இந்த கன்று குட்டியை ஆச்சிரியத்தோடு கிராம மக்கள் பார்த்து செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக