மேலும் இதேபோல் பெரியாம்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பொருட்கள் திருட்டு பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால் நேற்று பள்ளியின் தனது அறையை பூட்டி விட்டு சென்று விட்டார்.இன்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது தன்னுடைய அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் டேட்டா பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டுள்ளன .இந்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் முழு தகவலும் இந்த கம்ப்யூட்டர் டேட்டாவில் சேமிக்க வைக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் பொருட்களை திருடி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே நாளில் பெரியாம்பட்டியில் இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக