ஜோதிஅள்ளியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

ஜோதிஅள்ளியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அடுத்த  ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  நவீன்குமார் (வயது.27) இவர் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஜெயஸ்ரீ கோபித்துகொண்டு நரிப்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு சென்று விட்டார், பலமுறை அழைத்தும் மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த நவீன்குமார் நேற்று வீட்டில் உள்ள மின் விசிறியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad