சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் கடந்த 01.08.2023 முதல் ஆன்லைனில் (online) மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தின்கீழ். இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது கீழ்காணுமாறு சான்றுகள் இணைத்து விண்ணப்பங்களை ஆன்லைனில் (online) மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் வேண்டும்.
விண்ணப்பிக்கும் பொழுது இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
- விதவை/கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று
- குடும்ப வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்)
- வயது சான்று (20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்)
- ஆறு மாத கால தையல் பயற்சி சான்று
- ஆதார் அட்டைநகல்
- தனியரின் புகைப்படம்
- ஜாதிசான்று
- இருப்பிடசான்று
- குடும்ப அட்டை நகல்
- வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பின் (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சான்று BPL எண்ணுடன் பதிவேற்றம் செய்யவேண்டும்)
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக