தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் சாமனுர் ஊராட்சி மன்றம் தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சாமனுர் ஊராட்சி மன்ற தலைவராக திமுக வை சேர்ந்த அம்பிகா பாக்கியராஜ் என்பவர் உள்ளார். இக்கிராமத்தின் அதிமுவை சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய் ஒரு சிலரால் சில மாதங்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது.
இதனால் சாக்கடை கால்வாய் நீர் வெளியேற வழியின்றி அப்பகுதி முழுக்க வீடுகளின் முன்பு தேங்கி உள்ளது.இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் தெரிரிவித்தும் கண்டுகொள்ளவில்லை,
இதனால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் தெருவில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, தற்போது மழைநீர், கழிவுநீர் இரண்டும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கு அடிக்கடி பல்வேறு உடல் நலகோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் இப்பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு கூட தூய்மை பணியாளர்ககளை ஊராட்சி மன்ற தலைவர் அனுப்புவதில்லை கட்சி பாகுபாடு பார்த்து செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக